காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி!
யாழ்ப்பாணம், காரைநகர் இந்துக்கல்லூரிக்கு முன்பாக பாடசாலை மாணவர்களினை மையப்படுத்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் இன்று மதியம் இடம்பெற்றது.
குறிப்பாக தமிழினத்தின் வலிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் இளம் தலைமுறையான பாடசாலை மாணவர்களுக்கு எதற்காக கஞ்சி வழங்கப்படுகின்றது எனபதை எடுத்தியம்பும் துண்டுபிரசுரமும் வழங்கப்பட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால்
யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் மே 15ம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகமெங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
#srilankaNews
1 Comment