24 6646a18d30071
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம்: மைத்திரி

Share

தமிழ் மக்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம்: மைத்திரி

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

திருகோணமலை, மூதூர் – சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காக நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே மைத்திரிபால மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி அஞ்சலிக்க அவர்களின் உறவுகளுக்கு முழு உரித்து உண்டு.

அதை இன ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ பிரித்துப் பார்க்க முடியாது. எனவே, இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை அவர்களின் உறவுகள் நினைவேந்த அரசு அனுமதிக்க வேண்டும்.

அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி எந்தத் தடை உத்தரவுகளையும் அரசு விதிக்கக்கூடாது. வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

நினைவேந்தல் நிகழ்வைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது ஆட்சியில் நல்லாட்சி அரசில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்த அனுமதி வழங்கியிருந்தேன். உயிரிழந்தவர்களை வைத்து இன ரீதியில் – மத ரீதியில் அரசியல் நடத்தும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை.” என்றார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...