3 28
இலங்கைசெய்திகள்

திரைப்பட பாணியில் துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல்

Share

கந்தளாய் பகுதியில், இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று பகல் சன நெரிசல் அதிகம் காணப்படும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையே இவ்வாறு கூரிய ஆயுத தாக்குதலாக மாறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான நபரின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

”எனது மகனுக்கும், குறித்த நபருக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தாக்குதலானது இடம்பெற்றுள்ளது.

தனது கடைக்குள் நுழைந்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. தாக்குதலில் ஏற்பட்ட காயத்தினால் 25 தையல்கள் போடப்பட்டுள்ளன.

எனது பாதுகாப்புக்காக எனது மகன் மாத்திரமே இருக்கிறார். இதுபோன்ற குற்றங்கள் இடம்பெற பொலிஸார் அனுமதிக்ககூடாது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: 4 சந்தேகநபர்கள் கைது – விசாரணையில் இறங்கிய 3 விசேட பொலிஸ் குழுக்கள்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக நான்கு...

0 pigeon crossbow bolt
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புறா வளர்ப்பதில் தகராறு: பேலியகொடையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் பலி!

புறாக்கள் வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளதாகப் பேலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொடை...

11 26
செய்திகள்உலகம்

கிரீன்லாந்துக்காகப் புதிய வர்த்தகப் போர்: 8 நேட்டோ நாடுகளுக்கு 10% வரி விதித்தார் ட்ரம்ப் !

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், ஐரோப்பிய நாடுகள் மீது கடும்...

MediaFile 1 6
செய்திகள்இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை: மனைப் பொருளியல் செயன்முறைப் பரீட்சைகள் ஜனவரி 24-இல் ஆரம்பம்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மனைப் பொருளியல் (Home Economics) பாடத்திற்கான செயன்முறைப்...