யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8 மணியளவில் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய கண்ணன் காந்தன் எனும் இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மாலுசந்தி விளையாட்டுக்கழகத்தின் விளையாட்டு வீரராவார்.
குறித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியே இவ் விபத்து சம்மபவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment