ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் , நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை நிறைவேறினால்கூட ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யமுடியாது. எனினும், ஜனாதிபதிமீது நாடாளுமன்றத்தின் அவநம்பிக்கையை வெளிப்படுத்தலாம்.
#SriLankaNews
Leave a comment