பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி தடுப்புக்காவலில் உள்ள தனது மகனை விடுவிக்குமாறு
தாயொருவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறும் நாமல் ராஜபக்சவிடம் அவர் கோரிக்கை விடுத்த்துள்ளார்
மட்டக்களப்பு வந்தாறுமுலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பிரதம விருந்தினராக வந்திருந்த நாமல் ராஜபக்சவிடம் தாயொருவர் இவ்வாறு கோரியுள்ளார்.
தனது மகனுக்கு இவ்விடத்திலேயே தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment