அநுராதபுரம் பகுதியில் ஒன்றரை மாத பச்சிளம் சிசுவை கோடாரியால் வெட்டி கொடூரமாக தாய் ஒருவர் கொலை செய்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உடபட்ட பகுதியிலேயே இவ்வாறு இளம் தாய் ஒருவரால் சிசு கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பட்டதாரி ஆசிரியையான (வயது–30) குறித்த தாய், சிசுவை நேற்றுமுன்தினம் இவ்வாறு கொலை செய்துள்ளார் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குழந்தையை கொலைசெய்த பின் பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதுதொடர்பில் எதுவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் குழந்தையின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment