யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இணுவிலை சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற கர்ப்பிணிப் பெண்ணே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி இவருக்கு முச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவருக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளன. அவர் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் இரண்டும் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளன.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
Leave a comment