இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ரொய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 70.2 வீதத்தை எட்டியுள்ளதாகவும், உயர் பணவீக்கத்தினால் மக்களின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த சவாலான நேரத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இலங்கைக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு, கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற்று ஏனைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை நிறைவேற்றுச் சபையின் அனுமதியைப் பெறுமென தாம் நம்புவதாக தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவித் திட்டத்தை நிறைவு செய்த பின்னர், இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து காப்பாற்ற கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறினார்.
#SriLankaNews
Leave a comment