ஓய்வூதிய சுற்றறிக்கை இலக்கம் 05/2021இன் பிரகாரம் ஓய்வூதிய திணைக்களத்தினால் 2022ஆம் ஆண்டுக்கான மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு பற்றிய விவர சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எ.ஜகத். டி.டயஸ் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டிற்கான மாதாந்த ஓய்வூதிய கொடுப்பனவுகள் பின்வரும் திகதிகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தை07ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மாசி 10ஆம் திகதி வியாழக்கிழமை, பங்குனி 10ஆம் திகதி வியாழக்கிழமை, சித்திரை 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை, வைகாசி 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, ஆனி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஆடி 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஆவணி 10ஆம் திகதி புதன்கிழமை, புரட்டாதி 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஐப்பசி 06ஆம் திகதி வியாழக்கிழமை கார்த்திகை 10ஆம் திகதி வியாழக்கிழமை, மார்கழி 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment