சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த விகாரையின் பிரதம பிக்கு ஒருவரை நேற்று (25) ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்தனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா விகாரையில் தங்கியிருந்த 11 வயது சிறுவனே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுவன் பிக்குவாக படிப்பதற்காக விகாரையில் தங்கியிருந்து படித்து வந்துள்ள நிலையில் நீண்டகாலமாக பிரதம பிக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று (25) சிறுவன் பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளான். இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் கைதுசெய்ததுடன் சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த பிக்குவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment