tamilnih 13 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

Share

தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய யுவதி

பேருவளையில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் போது சுமார் நான்கு மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் காசாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயாகல, ஹல்கந்தவில, துவாகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை, அம்பேபிட்டியகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023.06.09 முதல் 2024.02.06 வரை இந்த மோசடி நடந்துள்ளது, மேலும் 12 ஊழியர்கள் நிறுவனத்தில் பணி புரிகின்றனர்.

கடையின் கணினி அமைப்பு மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்பை ஆய்வு செய்த போது, பணத்திற்கும் வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.​​ வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய 1475 பட்டியல்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை இதன்போது தெரிய வந்துள்ளது.

இந்தப் பணத்தை பட்டியல்கள் கணினி கட்டமைப்பில் பதிவு செய்து ஏமாற்றியதாக முறைப்பாட்டாளர் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...