இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் நேற்று (11) பிற்பகல் சென்றுள்ளனர்.
எனினும், அவர்கள் மேலும் ஒருமுறை விடயம் தொடர்பில் சரிபார்த்து, பின்னர் வருவதாக தெரிவித்து திரும்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
Leave a comment