ATM இயந்திரம் அமைந்துள்ள பிரதேசங்களில் காத்திருந்து நபர்களை ஏமாற்றி அவர்களது ஏரிஎம் அட்டைகளை தந்திரமாக பெற்று 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்துள்ள நபரொருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட போது குறித்த நபரிடம் பல்வேறு நபர்களுக்கு உரிமையான 8 வங்கி அட்டைகள் காணப்பட்டதாகவும் அவரைக் கைதுசெய்த கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கடுவலையிலுள்ள அரச வங்கியொன்றிற்கு அருகில் இருந்து 40 தடவைகளுக்கு மேல் பல்வேறு நபர்களை ஏமாற்றி 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இவ்வாறு பியகம, மாலபே பிரதேசங்களிலுள்ள தனியார் மற்றும் அரச வங்கிகளில் ATM இயந்திரத்திற்கு அருகில் தங்கியிருந்து இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மோசடிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொலைபேசி அழைப்பில் இருப்பது போன்று பாசாங்கு செய்து இயந்திரம் அமைந்துள்ள பகுதியில் பிரவேசித்து கைங்கரியமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment