செய்திகள்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

Share
son dad
Share

காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு!

வவுனியாவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் வவுனியாவில் நேற்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா மதியாமடு, புளியங்கும் பகுதியைச் சேர்ந்த (வயது–73) செபமாலை இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நாட்டில் 2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் இராசதுரை விஜி கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை கடந்த 12 ஆண்டுகளாக தேடி மகன் பற்றிய நம்பகர தகவல் ஏதும் அறியாமலேயே இந்த தந்தை உயிர்நீத்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்திலும் குறித்த தந்தை கலந்துகொண்டு தொடர்ச்சியாக போராடியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...