காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ்
இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவைப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த வகையிலும் மறைக்க முடியாது. மறைக்க வேண்டிய விடயமும் அல்ல. காணாமல் போனதாக கூறப்படும் பலர் புலர்பெயர் நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தமது பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கும் பெற்றோர் கண்ணீர் விடும் காட்சிகளை நாம் காண்கிறோம். எனவே இவர்கள் இலங்கையின் பிரஜைகள். இவர்கள் தொடர்பில் நாம் பொறுப்புடன் செயற்படும். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே சிறந்தது.
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் திட்டவட்டமாக என்னால் கூற முடியாது. இதனைக் கண்டறியவே காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெளிநாட்டு புலம்பெயர் இலங்கையர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எனவே அனைவரும் ஒன்றிணைந்து இது குறித்து பேச்சு நடத்தி தீர்மானங்களை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment