03 நாட்களாக காணாமல்போனவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுப்பு!

Death 1 1

திருகோணமலை – தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய பொடி அப்புக்காமி விஜயதாச என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில், நல்லூர் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள பழைய வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பூர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version