ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி முன்னுதாரணமாக செயற்பட்டால், நானும் அமைச்சு பதவியை துறந்து, மொட்டு கட்சி தரப்பில் இருந்து முன்மாதிரியாக செயற்பட தயார்.” – என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்குமாறு மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார். முதலில் சுதந்திரக்கட்சியின் அமைச்சு பதவியில் இருந்து விலகி, முன்னுதாரணமாக செயற்படட்டும். அதன்பின்னர் நான் பதவி துறப்பேன்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment