” கட்சியின் தீர்மானத்தை மீறியே நிமல் சிறிபாலடி சில்வா அமைச்சு பதவியை ஏற்றுள்ளார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
” சர்வக்கட்சி இடைக்கால அரசே எமது யோசனையாக இருந்தது. தேசிய நிறைவேற்று சபையை நிறுவுமாறு கோரியிருந்தோம். ஆனால் தற்போது பழைய ஆட்சிக்கே புத்துயிர் கொடுக்கப்படுகின்றது. இதனால் மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள்.
அரசுக்கு ஆதரவு வழங்குவதெனவும், அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை எனவும் கட்சி தீர்மானித்திருந்தது. எனினும், அந்த தீர்மானத்தைமீறியே எமது கட்சி உறுப்பினர் அமைச்சு பதவியை ஏற்றுள்ளார்.” – என்றும் மைத்திரி குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment