25 683eae37a8248
இலங்கைசெய்திகள்

கோவிட் நிலைமையை சமாளிக்க அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை: சஜித் விசனம்

Share

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது, இதற்கிடையில் கோவிட் புதிய திரிபும் பரவி வருகின்றது, இந்த நிலைமையை சமாளிப்பதற்கு அரசிடம் எந்த முன்னாயத்தத் திட்டங்களும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும், தற்போது நாட்டில் பல்வேறு மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவில் 180 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது

வைத்தியசாலை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடங்குகின்றன.

இது தொடர்பில் நாம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதிலும், அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் அரசு முன்வைக்கவில்லை.

எல்.பி. 8.1 எனப்படும் கோவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றது. இந்தத் துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்தவித பரிசோதனைகளும் நடைபெறுவதாகக் காண முடியவில்லை.

இந்தத் துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மருத்துவமனைகளில் இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

இந்நிலைமையில் தற்போது சின்னம்மை நோயும் அதிகரித்துள்ளது. இந்த நோய்க்கு ஆகக் குறைந்தது 6 வாரங்களாவது தொடர்ச்சியாகச் சிகிச்சையளிக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...