ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கு . சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் காரணமாக வெற்றிடமான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர், நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
இன்னும் இரு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசு அமையவுள்ளது, அதில் வஜீரவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment