அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்ட செயற்பாட்டாளர் கணக்கில் பல மில்லியன் ரூபா வைப்பு! – சட்ட நடவடிக்கை விரைவில்

Share
ratta
Share

தனக்கு தெரியாத நபர்களிடமிருந்து திடீரென தனது வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டதாக, காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரெட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியில் முறைப்பாடு செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தனது சமூகவலைத்தள கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர்,

போராட்டத்திற்காக தனிப்பட்ட பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில திடீரென எனது கணக்கிற்கு எவ்வித அறிவிப்புமின்றி 50 லட்சம் ரூபா வைப்பிடப்பட்டுள்ளது. நான் இதனை எடுத்து செலவு செய்த பின்னர் போராட்டம் மூலம் நிதி மோசடி செய்ததாகவும், டயஸ்போரா வலையில் சிக்கி விடுவேன் எனவும் இதனை வைப்பிட்டவர் திட்டமிட்டிருப்பார்.

நான் CIMA தகுதி பெற்ற கணக்காளர் ஒருவராகும். நான் பணத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடியவன் அல்ல என உங்களுக்கு தெரியும். இதுவரையில் போராட்டத்தில் தனிப்பட்ட இலாபம் எதுவும் பெறவில்லை.
எமது கைகள் 100 சதவீதம் சுத்தமாக இருந்தமையினாலேயே எம்மை அடக்குவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சேறு பூசும் பிரச்சாரங்கள் குறித்து அலட்சியமாக இருக்க முடிந்தது.

இன்று திடீரென எனது கணக்கில் விழுந்த 5 மில்லியன் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் சம்பத் வங்கியில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன் என ரெட்டா குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...