200 ரூபாவால் பால்மா விலை அதிகரிப்பு!

milk powders 6y666

உள்நாட்டு சந்தைகளில் ஒரு கிலோ பால்மா பைக்கெற்றின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதியமைச்சால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சருக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சருடனான சந்திப்பின் போது சர்வதேச சந்தையில் பால்மா விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலும் கிலோ ஒன்றுக்கு 340 ரூபா விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் நிதியமைச்சு 200 ரூபா விலை அதிகரிப்புக்கே இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விலை அதிகரிப்பை உடன் நிறுத்துமாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version