பால் விலை ஓரிரு நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளது.
இதனை, இராஜாங்க அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துவரும் நிலையில், பால்மா விலை குறித்து பால் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு சந்தையில் திரவப் பாலுக்கு கேள்வி அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இதேவேளை, பால் பண்ணையாளர்களின் நலன் கருதி மில்கோ நிறுவனம் திரவ பாலின் விலையை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment