இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரித்தாலும் எங்களுக்கு ஒரு கிலோ கிராம் பால்மாவுக்கு 150 ரூபா நட்டம் ஏற்படுகிறது.
இவ்வாறு இலங்கை பால்மா இறக்குமதியாளர் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தற்போது உலக சந்தையில் கிலோ பால்மா 4.10 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது இந்த எண்ணிக்கை 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் பால்மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் 200 ரூபாவால் அதிகரிப்பதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் எமக்கு 150 ரூபா நட்டம் ஏற்படுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment