இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பால்மா இறக்குமதியாளர் சங்கம் இன்று விடுத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 150 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய விலை பட்டியலின் பிரகாரம் ஒரு கிலோ பால்மா ஆயிரத்து 345 ரூபாவுக்கும், 400 கிராம் பால்மா 540 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படும்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் உள்நாட்டு பால்மா விலைகளும் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையிலேயே தற்போது மீண்டும் அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
#SriLankaNews
Leave a comment