தமிழ் மக்களால் இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில். யாழ் – சாட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்களையும் தாண்டி அங்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் ,ஞானேஸ் மற்றும் செயற்பாட்டாளர்கள் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்.
அத்துடன், உயிர் நீத்த மக்களுக்காக வீர வணக்கத்தையும் செலுத்தினர்.
#SriLankaNews