sampanthan 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியுடன் சந்திப்பு – உறுதிப்படுத்தினார் சம்பந்தன்

Share

மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில்,தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கபூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார்.

வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திரபூர்வமான வாழ்விடங்கள் என்ற அடிப்படை சர்வதேச ரீதியாகவும் நாட்டுக்குள்ளேயும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரே அலகாக உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படைக்கு மாறாக எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட நாம் தயாராக இல்லை.

மேற்சொன்ன அடிப்படையில்தான் மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்குபெற்றுவோம் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...