32
இலங்கைசெய்திகள்

ஐ. நா வதிவிடப் பிரதிநிதிக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையே விசேட சந்திப்பு

Share

ஐ. நா வதிவிடப் பிரதிநிதிக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையே விசேட சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடாவிற்கும் (Azusa Kubota) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தொடர்பிலும் தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆர்வம் தொடர்பிலும் வதிவிடப் பிரதிநிதி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்த அசூசா குபோடா, அரச சேவையின் வெளிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்காக விரைவில் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்த மறுசீரமைப்புகளை சரியான முறையில் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் அரச ஊழியர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமென குறிப்பிட்டார்.

மேலும், இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்குப் பிரவேசிப்பதற்கு தேவையான திறன் மற்றும் அறிவு கொண்ட அரச அதிகாரிகளை உருவாக்குவதற்கான உதவிளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டம் தயாராக இருப்பதாகவும் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஜனாதிபதி செயலாளரிடம் உறுதியளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...