16 27
இலங்கைசெய்திகள்

மருத்துவ ஆய்வக உதவியாளர் நியமனத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Share

இணை சுகாதாரத்துறையின் மருத்துவ ஆய்வக உதவியாளர்கள் நியமனங்கள் வழங்கப்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த நியமனத்தால் பாதிக்கப்பட்ட 270 பட்டதாரிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அமர்வால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், குறித்த நியமனங்கள் வழங்குவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (27) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த மனு மீண்டும் 11ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளதுடன், அந்த திகதி வரை இந்த நியமனங்கள் வழங்குவது தொடர்பில் தற்போதைய நிலையே தொடரும் என்று நீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், இதன் ஊடாக தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குறித்த நியமனங்கள் வழங்குவதை தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...