மருத்துவ பரிசோதனைக் கட்டணம் அதிகரிப்பு!

1659756301 1659753796 drive L

ஓட்டுநர் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைக் கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம், சிறுநீர் பரிசோதனை தவிர்த்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version