அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை
இலங்கைசெய்திகள்

அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை! வெளியேறிய கடைசி நிபுணர்

Share

அபாய நிலையில் இலங்கையின் மருத்துவத்துறை!

குழந்தை கதிரியக்கவியல் தொடர்பான இலங்கையின் ஒரேயொரு நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் தகவல் வழங்கியுள்ள அவர், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுகாதாரத் துறைக்கு குறைந்தது 4,000 நிபுணத்துவ மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். எனினும் தற்போது, 2000 மருத்துவர்களே சேவையில் உள்ளனர்.

அத்துடன் சிறப்பு மருத்துவர்களின் ஓய்வு வயதை 60 ஆக நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் முடிவால், மீதமுள்ள 50 சதவீதத்தில் சுமார் 250 மருத்துவர்கள் தமது பதவியை இழப்பார்கள் என்றும் அசோக குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 289 மயக்க மருந்து நிபுணர்கள் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு 155 பேர் மட்டுமே உள்ளனர், அவர்களில் 30 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மீதமுள்ள மயக்க மருந்து நிபுணர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால், சுகாதாரத் துறை மேலும் 20 மயக்க மருந்து நிபுணர்களை இழக்கும் என்று குணரத்ன கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாட்டில் குழந்தை கதிரியக்க மருத்துவத்தில் ஒரே ஒரு நிபுணர் மட்டுமே இருந்தார், அவரும் தற்போது புலம்பெயர்ந்துள்ளார் என்று விசேட மருத்துவர்கள் சங்கத்தின் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...

எல் நினோ
இலங்கை

2027 ஏப்ரல் வரை நீடிக்கவுள்ள எல் நினோ தாக்கம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின்...

சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...