வன்முறை
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மே 9’ வன்முறையில் மேலுமொருவர் சாவு!

Share

இம்மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – கொள்ளுப்பிட்டி பெரஹர மாவத்தை மற்றும் பேர வாவிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நடைபாதையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.

குளியாப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் கடந்த 9ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலை மற்றும் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்ய கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 1 4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான ஊழல் வழக்கு: கையடக்கத் தொலைபேசி கட்டணம் மோசடி – சாட்சிப் பதிவு நிறைவு, மேலதிக விசாரணை டிசம்பர் 9க்கு ஒத்திவைப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு...

image 87489e8d1f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை முத்து நகரில் 42 நாட்களான சிசு உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைப்பு – காவல்துறையினர் விசாரணை!

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர்...