தந்தையை இழந்த நிலையில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் வசிக்கும் பெண்பிள்ளை ஒருவரின் திருமண நிகழ்வுக்காக இரண்டு லட்சம் ரூபா நிதி உதவியை தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் வழங்கியுள்ளது.
தெல்லிப்பழை பெரியபுலம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்துக்கே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வெளியிடப்படும் ஞானச்சுடர் இதழின் தைமாத இதழுக்கான பங்களிப்பை ஆற்றும் மக்கள் வங்கியின் ஒத்துழைப்புடன் இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து குறித்த உதவி வழங்கப்பட்டது.
இதன்போது மிருசுவில் வடக்கு பத்திரகாளியம்மன் ஆலய புனருத்தாரண வேலைகளுகளுக்கு ஆலய நிர்வாகத்தினரிடம், சந்நிதியான் ஆச்சிரமத்தினால் ஐம்பதாயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment