Jaffna 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் இடம்பெற்ற மார்கழிப் பெருவிழா!

Share

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமும் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் அப்பர் சுவாமிகள் அமர்வு முதலாவதாக ஆரம்பமானது.

முதலாம் அமர்வில் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் நிறுவுனர் தென்னவன் பார்த்தீபன் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் உரையும் நவரத்தினம் பரந்தாமன் குழுவினரின் திருமுறை விண்ணப்பமும் மதுரையைச் சேர்ந்த சொ.சொ.மீ சுந்தரம் ஐயா அவர்களின் தொண்டு நெறி எனும் தலைப்பிலான சிறப்புரையும் இடம்பெற்றது.

Jaffna 01 1 1

இந்நிகழ்வில் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மறவன்புலவு சச்சிதானந்தன், ஆன்மீக தலைவர்கள் மத பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மார்கழிப் பெருவிழா இன்றும் நாளையும் நான்கு அமர்வுகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07
செய்திகள்உலகம்

உக்ரைன் போரின் 4-வது ஆண்டு நிறைவு: புதினால் எங்களை உடைக்க முடியவில்ல – அதிபர் ஜெலென்ஸ்கியின் தீர்க்கமான உரை!

ரஷ்யா தனது ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’யைத் தொடங்கி இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உக்ரைன்...

06
செய்திகள்உலகம்

ஈரான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: காய்கறிச் சந்தையில் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் உயிரிழப்பு

ரான் நாட்டின் மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan), அந்நாட்டு ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று...

05
செய்திகள்அரசியல்இலங்கை

26,000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி! – MAS நிறுவன ஆலைகள் மூடல் குறித்து சஜித் பிரேமதாச கடும் கவலை!

இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ள MAS Holdings நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகள்...

04
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் கோர விபத்து: ஏர் அம்புலன்ஸ் விழுந்து நொறுங்கியது – நோயாளி, மருத்துவர் உட்பட 7 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ரெட் பேர்ட் ஏர்வேஸ்...