“அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யமுடியாது. அதேபோல ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்படவும் முடியாது.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“அரசுக்குள் இருந்துகொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடியும். எனவே, விமர்சனங்களை முன்வைப்பவர்களை விலக்குவதற்கு பதிலாக, தீர்வுகளை வழங்குவதே பொருத்தமான நடவடிக்கையாகும்.” என்று அரச தலைவர் பதவியை வகித்த ஒருவர் (மைத்திரிபால சிறிசேன) விமர்சித்துள்ளார். அவரின் இந்த கருத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது.
விமர்சிக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால் அதற்கு பொருத்தமான இடங்களும் உள்ளன. அரசுக்குள் உள்ள பிரச்சினைகளை நாடாளுமன்றக்குழுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டலாம். அல்லது தலைவர்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசலாம். அதனைவிடுத்து பொதுவெளியில் விமர்சிப்பது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது.” – என்றார்.
#SriLankaNews