மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர், வெளியிட்ட கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தரப்பு முற்றாக நிராகரித்துள்ளது.
“மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை வழங்குவது தொடர்பாக கோப் குழு விசாரணையின் போது, இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை திட்டவட்டமாக மறுக்கின்றேன்.” – என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ இந்தத் திட்டத்தை வழங்குவதற்கான அங்கீகாரத்தை வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார் என ஜனாதிபதி தம்மிடம் தெரிவித்ததாக இலங்கை மின்சார சபைத் தலைவர், கோப் குழுவுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.
#SriLankaNews