1682398628 harthal mannar 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முற்றாக முடங்கியது மன்னார்!!

Share

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (25) பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டம் முழுவதும் முற்றாக முடங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும், மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.

அதே நேரம் பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதே நேரம் அரச திணைக்களங்கள் மற்றும் அரச போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்ற போதும் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...