24 663596b3b7f33
இலங்கைசெய்திகள்

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

Share

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் (Mannar) – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (02.05.2024) இடம்பெற்றுள்ளது.

அடம்பன் – பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் குறித்த நபரை நேற்று (3) மாலை அடம்பன் பொலிஸார் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் காட்டு இறைச்சி விற்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முரண்பட்ட நபரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து பனை உற்பத்தி பொருளான பனங்கள் போத்தல் மீட்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக்கொண்டு குறித்த சீவல் தொழிலாளியை பொலிஸார் கைது செய்ய முயன்ற நிலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் காயம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸார் கை விலங்கினால் தாக்கியதாகவும், போலியான வழக்கினை தன் மீது சுமத்த முயற்சி மேற்கொள்ளபட்டதாகவும் சந்தேக நபர் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்தே நபர் மீது எந்தவித தாக்குதலும் மேற்கொள்ளவில்லை என்றும், மதுபோதையில் வேறு ஒரு நபருடன் முரண்பட்டதில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பலத்த காயங்களுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட்ட நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...