manar boy 5656
இலங்கைசெய்திகள்

மன்னார் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது!

Share

மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மகனை நித்திரையாக்கிவிட்டு தாயார் குளிக்க சென்ற நிலையில் தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாய் ஓடி வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான் என தாயார் தெரிவித்துள்ளார்.

இது தற்கொலை இல்லை எனவும் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு விவரம் தெரியாதவன் இல்லை எனவும் அவனது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரையும் இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...