IMG 20220607 WA0076
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மானிப்பாய் திருட்டு! – ஒருவர் கைது

Share

மானிப்பாயில் வீடு உடைத்து இலத்திரனியல் உபகரணங்களைத் திருடிய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் மானிப்பாய் முத்துத்தம்பி வீதியில் புதிததாக கட்டப்பட்ட வீடொன்றை உடைத்து அங்கிருந்த சலவை இயந்திரம், வளிச்சீராக்கி (ஏசி) சிசிரிவி கமரா உள்ளிட்ட 6 லட்சத்து 18 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டன.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் மானிப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மானிப்பாய் ரிசி ஒழுங்கையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படை்யில் திருட்டுப் போயிருந்த மின் உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 32
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிதி மோசடியில் ஈடுபட்ட 125 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி நிதி மோசடிகளில் (Online Scams) ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 125...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும்...

Untitled 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் நெருக்கடி: இலங்கையில் வாரத்திற்கு 4 நாட்கள் மாத்திரம் பாடசாலை!

உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் நிர்வாகம் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கல்வி...

Untitled 28
செய்திகள்உலகம்

“நேவி சீல்ஸ் வருகை”: ஈரானைத் தாக்கத் தயாராகும் அமெரிக்கச் சிறப்புப் படைகள் – ட்ரம்ப்பின் அடுத்த மூவ் என்ன?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘ஆர்மி...