tamilni 474 scaled
இலங்கைசெய்திகள்

காதலர் தினத்தில் மனைவிக்காக 29 பவுண் நகையை திருடிய கணவன்

Share

யாழில் காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாண நகரில் நேற்று 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்றபோது பெண் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை பின்னர் பிரதான சந்தேக நபரான ஆண் 25 பவுண் நகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...