20220619 164632 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கீரிமலையில் மீட்கப்பட்ட ஆண் கழுத்து நெரித்து கொலை!

Share

காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தகவலை அடுத்து
இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரைக் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் ச. நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார்.

நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் காணப்பட்டதாக அவரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று அறிக்கையிட்டுள்ளனர்.

இந்த மரணத்தில் காங்கேசன்துறை பொலிஸார் சந்தேகம் கொண்டதால், உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. உடற்கூற்று பரிசோதனையில் இவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பாக எழுந்த முரண்பாடு ஒன்றை அடுத்தே இந்தக் கொலை நடந்துள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...