malaria
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞனுக்கு மலேரியா!

Share

யாழ்.போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே மலேரியா காய்ச்சலுடன் இனம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியா நாட்டில் இருந்து திரும்பி வந்ததாகவும் , அந்நிலையில் கடுமையான காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் குறித்த இளைஞனுக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டில் இருந்து வருவோர் காய்ச்சலுக்கு ஆளானால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களினால் மலேரியா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மலேரியா எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா முன்னெச்சரிக்கை மருத்துவ வழிகாட்டுதல்களை தகுதி வாய்ந்த மருத்துவ அதிகாரிகளிடம் பெற்றுச் செல்லுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...