Sritharan
அரசியல்இலங்கைசெய்திகள்

சமஸ்டி கோரிக்கையை முன்வையுங்கள்!

Share

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசத்தயார், ஆனால் சர்வதேச தலையீடு தேவையில்லை என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். யுத்தத்தை நடத்துகிற போது வெளியாரின் தலையீடு தேவைப்பட்டது என்றால், எம்மை அழிக்கின்ற போது வெளியாரின் தலையீடு தேவைப்பட்டது என்றால், இப்போது பணம் பெறுவதற்கு வெளியாரின் தலையீடு தேவைப்படுகின்றது என்றால், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வெளியாரின் தலையீடு தேவைப்படுகின்றது என்றால், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்றபோது மட்டும் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ச்சியாக ஏமாற்று செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த காலங்களிலும் அவர் இதுபோன்ற செயற்பாடுகளையே முன்னெடுத்தார். கடந்த காலங்களில் ஒருபக்க பார்வைகளால் சமாதானத்துக்கான கதவுகள் மூடப்பட்டன. அந்த அனுபவங்களை வைத்தே இப்போதும் நாம் பேசுகின்றோம்.

ரணில் விக்கிரமசிங்க இதய சுத்தியுடன் இருக்கின்றார் என்றால், இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கின்ற இனப் பிரச்சினையை தீர்க்க அவர் தயாராக இருக்கின்றார் என்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சமஸ்டி அடிப்படையில் பேசுங்கள். சமஸ்டி என்கிற கோரிக்கையை முன்வையுங்கள்.

எம்முடன் நீங்கள் ஒரு தீர்வுக்கு வரத் தவறினால் நாளைய வரலாறு உங்களை வேறு திசைக்கு கொண்டு செல்லலாம். அது வேறு விதமான விபரீதங்களை ஏற்படுத்தலாம். ஆகவே சமாதானத்தை ஏற்படுத்த தயாராகுங்கள். இதுவே நாட்டை கட்டியெழுப்ப சாதகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...