நாட்டின் மிக முக்கியமான அரச நிறுவனங்கள் பல தனியார் மயப்படுத்தப்படவுள்ளன.
இவ் விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை விமான சேவை நிறுவனம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment