அரசாங்கம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்;
பொருளாதார, அரசியல் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளை அரசாங்கம் எதிர்கொள்கிறது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமாக இருந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவை இலங்கை நாட வேண்டும்.
அரசாங்கத்தின் மோசமான பொருளாதார தீர்மானங்களினால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதமடைந்துள்ளது.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்த அவர், தனது பதவிக் காலம் முழுவதும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews