ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ, தனது எம்.பி பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை, அவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
இவ்வாறு எம்.பி.பதவியை துறந்த அவர் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவராகக் கருதப்படும் மஹிந்த சமரசிங்க, இலங்கையின் சார்பில் ஜெனிவாக் கூட்டத்தொடர்களிலும் பங்கேற்றுள்ளார்.
#SriLankaNews
Leave a comment