mahinda 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வன்முறைச் சம்பவங்களுக்கு மஹிந்தவே பொறுப்பு! – டிலான் தெரிவிப்பு

Share

இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என ஏப்ரல் மாதம் முதல் வலியுறுத்தி வந்தேன். சபாநாயகரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தேன். பிரதமர் பதவி விலகாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினேன்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியெல்லாம் நடந்துதான் பிரதமர் பதவி விலகினால், சிலவேளை காலை 9 மணிக்கு பிரதமர் பதவி விலகியிருந்தால்கூட வன்முறை வெடித்திருக்காது. எனவே, மஹிந்த ராஜபகக்சவும் பொறுப்புக்கூற வேண்டும்.

பிரதமராக ரணில் தெரிவாகியுள்ளார். அவரை கடுமையான விமர்சித்தவன் நான். ஆனால் சர்வதேச ஒத்துழைப்பை பெறக்கூடிய நபர் அவர். எனவே, அவருக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றும். தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...