” பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகமாட்டார். எனினும், தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவர் நாளை விசேட அறிவிப்பொன்றை விடுக்கலாம்.” – என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்துள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதி கோரினால் மட்டுமே தான் பதவி விலகுவார் என மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment